» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
சனி 3, ஜூன் 2023 10:43:40 AM (IST)

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி 100 ஆவது பிறந்தநாள் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிதா செல்வராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ப்ளோரன்ஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் ரூபஸ் ஆசிர்வாதம், மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், வர்த்தக அணி கிறிஸ்டோபர், மருத்துவ அணி அருண்குமார், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










