» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் செல்போன் பறித்த 2பேர் கைது!
சனி 3, ஜூன் 2023 7:31:17 AM (IST)
தூத்துக்குடியில் தகராறு செய்து தாக்கி செல்போனை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கணேஷ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகேசன் (23) என்பவர், தனது நண்பரான தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மகன் அபிஷ்குமார் (20) என்பவருடன் கடந்த 31.05.2023 அன்று செல்சீனி காலனி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மாரிசிவா (எ) மொட்ட சிவா (21) மற்றும் சாந்தி நகரைச் சேர்ந்த பரமசிவன் மகன் அரிமுருகன் (25) ஆகிய 2 பேர் சேர்ந்து முருகேசன் மற்றும் அபிஷ்குமாரிடம் தகராறு செய்து முருகேசனை பாட்டிலால் தாக்கியும், அபிஷ்குமாரிடமிருந்த செல்போனை பறித்தும் சென்றுள்ளனர்.இதுகுறித்து மேற்படி முருகேசன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்குபதிவு செய்து மாரிசிவா (எ) மொட்ட சிவா மற்றும் அரிமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










