» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா

வியாழன் 1, ஜூன் 2023 7:57:46 PM (IST)


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா முத்துப்பேட்டை மற்றும் ஆவல்சின்னாம்பாளையம் ஆகிய இடங்களில் இன்று நடைபெற்றது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 532 மற்றும் 533வது கிளைகளை தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் ஆவல்சின்னாம்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. முத்துப்பேட்டையில் 532வது கிளையை அனைத்து முஹல்லா தலைவர் முகம்மது அலி (எ) ஜெர்மன் அலி, வங்கியின் பொது மேலாளர் . ஜெயராமன் முன்னிலையில் திறந்துவைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆவல்சின்னாம்பாளையத்தில் 533வது கிளையை கொட்டாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜமீன் பாலசுப்பிரமணியன் திறந்துவைத்தார். விழாவில் வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கூறுகையில், பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதன் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் துவக்கமாக இன்று தமிழகத்தில் 532 மற்றும் 533வது கிளைகளை திறந்திருக்கிறோம். மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறோம். வங்கி மீண்டும் ஈடுபட்டு வரும் தனது விரிவாக்க செயல்பாடுகளில், இன்று இந்த புதிய கிளை துவக்க விழாவின் மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டி வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 531 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. 


மக்கள் கருத்து

NadarsJun 1, 2023 - 08:35:10 PM | Posted IP 162.1*****

Are great example for hard work

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory