» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உதவ எஸ்.பி.சண்முகநாதன் ஆட்சியரிடம் மனு
வியாழன் 1, ஜூன் 2023 7:16:56 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிட கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையீடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மார்க்கெட் சிக்னல் அண்ணா சிலை முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயகணேசன் என்ற கீரை வியாபாரி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி திமுக மாவட்ட நிர்வாக பராமரிப்பில் இருந்த அண்ணா சிலை மின்விளக்கு மின்சாரம் தாக்கி இறந்த அவரின் இறப்பிற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை.
இந்நிலையில் இறந்தவர் மனைவி லிங்கசிவா தனது இரண்டு மகன்களுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து தனது கணவரின் இறப்பிற்கு அரசிடம் உரிய இழப்பீடும், தனது குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
அப்போது கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் யு.எஸ். சேகர், ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, வக்கீல் சரவணபெருமாள், வட்டச் செயலாளர்கள் வக்கீல் முனியசாமி, மனுவேல் ராஜ், சொக்கலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முத்துக்கணி, சாம்ராஜ், சகாயராஜா, யுவன்பாலா மற்றும் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

முத்துநகர் முத்துJun 1, 2023 - 08:00:32 PM | Posted IP 172.7*****