» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வளர்ச்சியில் அமைச்சர்களுக்கு அக்கறை இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!
வியாழன் 1, ஜூன் 2023 3:24:30 PM (IST)

"தூத்துக்குடியின் வளர்ச்சியில் இங்குள்ள அமைச்சர்களுக்கு அக்கறை இல்லை" என பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்தது வரவேற்கக் கூடியது. கடந்த முறை தமிழக முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற போது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடவில்லை அதனை வெளியிட வேண்டும்.
உதயநிதி பவுண்டேஷன், நோபல் பவுண்டேஷன் இரண்டும் ஒரே முகவரியில் உள்ளதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ஒருபோதும் ஒத்துக் கொள்ள முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டப்படும் என கூறி இருப்பது தெரிந்தும் தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேகதாது அணை கட்டப்படும் என பெயரளவில் மட்டும் அவர்கள் குறிப்பிடவில்லை நேற்று நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளிடமும் மேகதாது அணை கட்ட தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கு எதிராக தமிழக அரசு எந்தவித எதிர்ப்பு குரலையும் எழுப்பாமல் உள்ளது இது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டக்கூடிய சூழ்நிலை வந்தால் தமிழக பாஜக போராடியாவது அதனை நிச்சயம் தடுத்து நிறுத்தும். தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் பகுதிகள் வளர்ச்சி பெற வேண்டும். இங்கு உற்பத்தி தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். தென் மாவட்ட வளர்ச்சியை கவனத்தில் கொண்டு சிறப்பு பொருளாதார மாநாட்டை தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடத்த வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள அமைச்சர்களுக்கு இந்த பகுதி மீது அக்கறை வேண்டும். அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இங்கே புதிய அரசு கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டும். தொடர்ந்து தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த பகுதி வளர்ச்சி பெறும்.
தமிழகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து வரும் ஜூலை 9ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை துவங்க இருக்கிறேன். அப்போது திமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இங்கு மணல் கடத்தலை தடுக்க முயலும் விஏஓ உள்ளிட்ட வருவாய் துறையினர் வெட்டி கொலை செய்யப்படுகின்றனர். வருமான வரி சோதனைக்கு செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல பெண்கள் தாலி இழப்பதற்கு காரணமாகி வரும் மது மூலமாக ஊழல் செய்து வரும் அமைச்சர்களை கர்மா ஒருபோதும் விட்டு வைக்காது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள். திமுக அமைச்சர்கள் மனிதர்களாக கூட இருக்க தகுதி இல்லை. தமிழகத்தில் டாஸ்மார்க் வருவாய் மட்டும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி 1400 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளார். தமிழக மண்ணில் அழிவது சத்தியம் நிச்சயம் நடக்கும் என்றார். பேட்டியின் போது பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

தூத்துக்குடி மக்கள்Jun 1, 2023 - 06:30:01 PM | Posted IP 172.7*****