» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!

செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கலந்துரையாடினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (30.05.2023) தூண்டில் மாணவர் இயக்கம் சார்பில் நடைபெற்ற கடலோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், பள்ளி மாணவ, மாணவியர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் நோக்கில், தூண்டில் மாணவர் இயக்கம் கடலோர பள்ளி மாணவ, மாணவியர் (9ஆம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவியர்கள்)களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்குவதோடு, அரசுப்பணியின் முக்கியத்துவம் குறித்தும், அரசுத்துறைகளின் வகைகள், ஒவ்வொரு அரசுத்துறையின் செயல்பாடுகள் குறித்தும், அரசுப் பணியில் பணியாற்ற வேண்டுமென்றால் அதற்காக வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்தும், அந்த போட்டித்தேர்வுகளுக்கான கல்வித்தகுதி, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்புகள், தங்களது கிராமங்களில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகங்கள் மற்றும் பிரதிநிதிகள், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும், நவீன தொழில்நுட்பவியல் வளர்;ச்சி குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தின் தொன்மையான நாகரிகம் குறித்தும் அதாவது, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் நமது முன்னோர்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தற்கான தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றும், 

மாணவர்கள் ஒவ்வொருவரும் நமது வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மாணவர்கள் பள்ளி பருவத்தில் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், அன்றாட நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்ள வேண்டும். தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் வாயிலாக பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள முடியும். போட்டித்தேர்வுகளில் மிகவும் முக்கிய அங்கமாக இருப்பது இந்த பொதுஅறிவு. ஆகையால், மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே நூலகம் சென்று புத்தகம்; வாசிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, அன்றாட நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்வது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடித்தால் வாழ்க்கை வெற்றி நிச்சயம் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்கள்.

இன்று நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்;ச்சியில்; 11 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 50 பள்ளி மாணவ, மாணவியர்களும், 15 தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் ரா.பி. சகேஷ் சந்தியா, அரசு அலுவலர்கள் மற்றும் தூண்டில் மாணவர் இயக்கம் கடலோர கிராமங்களைச் சேர்ந்;த பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory