» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் வட மாநில தொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குநர் வழிகாட்டுதலின் பேரில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட மாநில தொழிலாளர்களிடம் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது. இப்பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார், ரத்த பரிசோதகர் விமல் ஆகியோர் பேய்க்குளம் பகுதியில் தங்கியிருந்து பணிபுரியும் ஒரிசா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6பேர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. 

அந்த ரத்த பரிசோதனையில் வேறு நோய்கள் அறிகுறிகள் தென்பட்டால் அதற்கேட்ப சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் எனவும், தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory