» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
என்.பெரியசாமி 6வது ஆண்டு நினைவு தினம் : கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மரியாதை!!
வெள்ளி 26, மே 2023 12:26:39 PM (IST)

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராக 25 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்தவர் என்.பெரியசாமி. திமுக தலைவர் கலைஞரின் அன்பிற்கு பாத்திரமாக விளங்கியவர். கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கபட்டவர். தூத்துக்குடி நகர தந்தையாக, தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து மக்கள் பணியாற்றிவர். அவரது 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்கண்டயன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், அருகில் உள்ள கீதா ஹோட்டல் மைதானத்தில் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
