» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகில இந்திய ஹாக்கி போட்டி : புது தில்லி அணிகள் அரையிறுதிக்குத் தகுதி

வெள்ளி 26, மே 2023 7:54:38 AM (IST)கோவில்பட்டியில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி, புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா, புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணிகள் முன்னேறியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா 2 கோல் போட்டு சமநிலை அடைந்தன. 

அதைத் தொடா்ந்து ஷூட்-அவுட் முறையில் 4 - 3 என்ற கோல் கணக்கில் புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மாலை 5 மணிக்கு நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணியும் சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியும் மோதின. இதில் 4 - 3 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

தொடா்ந்து நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணியும் பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதின. இதில் 4 - 0 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னா் நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணியும் சென்னை மத்திய கலால் துறை அணியும் மோதின.சனிக்கிழமை (மே 27) மாலை அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory