» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கார் விபத்தில் ஒருவர் பலி: மனைவி உட்பட 3பேர் காயம்!

வியாழன் 25, மே 2023 5:04:59 PM (IST)தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி, மகன்கள் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.. 

ராணிப்பேட்டை மாவட்டம், சிமிரி தாலுகா, கலவை புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் பெருமாள் (56). இவரது மனைவி வரலட்சுமி (48), மகன்கள் அருண்குமார் (30), யுவராஜ் (25) ஆகிய 4பேரும் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு வந்து வீட்டு மீண்டும் ராணிபேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். 

காரை ராணிபேட்டை கானவாடி அருணாச்சலம் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் (47) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று பிற்பகலில் 4 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்றபோது, ரமேஷ் பிளவர்ஸ் குடோன் எதிர்புறம் உள்ள எடை நிலையத்தில் வெளியே வந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். அவரது மனைவி, மகன்கள், டிரைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

நான்மே 26, 2023 - 03:24:34 PM | Posted IP 162.1*****

என்ன சொல்றேன்... லாங் ட்ரைவ் போனால் 100 ஐ விட குறைவான வேகத்தில் ஓட்டுங்கள் என்று சொல்கிறேன்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory