» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெறும் : சசிகலா புஷ்பா நம்பிக்கை!!

வியாழன் 25, மே 2023 8:50:34 AM (IST)

"வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெறபோவது உறுதி" என மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்தார். 

கோவில்பட்டியில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து சசிகலா புஷ்பா கூறுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் அராஜகத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், பிரதமரின் 9 ஆண்டுகால சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று சொல்ல உள்ளோம். கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பாரத பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படுகிறது.

இது பிரதமர் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கொடுத்துள்ள பரிசு. தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ் மொழி மீதும் பிரதமர் அதிக பாசம் வைத்துள்ளார். மோடி என்றாலே அவரது நல்ல விஷயங்களை மறைக்க முயற்சி பண்ணுகின்றனர். பா.ஜ.க.வை பொறுத்தவரை வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெறபோவது உறுதி என்றார்.

கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 30-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை மக்கள் தொடர்பு பேரியக்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொது செயலாளர்கள் வீ.வேல்ராஜா, கு.சரவணகிருஷ்ணன், எல்.கிஷோர்குமார், மாவட்ட பொருளாளர் கே.கே.ஆர்.கணேஷ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

PREMKUMARமே 26, 2023 - 11:25:30 AM | Posted IP 172.7*****

much more chances,! because current state government not doing infra,development projects for tuticorin. poor roads ,basic issues,amenites not solved

கே.கணேசன்.மே 25, 2023 - 02:22:48 PM | Posted IP 172.7*****

நிச்சயமாக BJP வெற்றி பெறும்.

OOPSமே 25, 2023 - 11:35:07 AM | Posted IP 162.1*****

Is it?

தமிழன்மே 25, 2023 - 11:23:12 AM | Posted IP 172.7*****

தமிழ்நாடு இப்போது உள்ள சூழ்நிலையில் பி ஜே பி வெற்றி பெற வாய்ப்புகள் நிறைய உள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory