» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சினை விரைவில் சீராகும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

புதன் 24, மே 2023 3:37:40 PM (IST)



தூத்துக்குடி மாநகரின் குடிநீர் பிரச்சினை  ஒரு வார காலத்திற்குள் சீராகிவிடும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்து வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு பருவமழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாநகரத்தில் உள்ள 60 வார்டு பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக கூடுதலான தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது. ஒரு வார காலத்திற்குள் குடிநீர் பிரச்சினை சீராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் நீரேற்று நிலைய பகுதிகளில் அவசர கால நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமலை செடிகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்ற உத்தரவிட்டு, சீரான நீர்வரத்து வருவதற்கான வேலைகளை தொடங்கி வைத்தார். ஆய்வின்போது ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

அண்ணாநகர்மே 25, 2023 - 06:43:17 AM | Posted IP 172.7*****

எல்லா வார்டுகளிலும் தண்ணீர் வரும் நேரம் கரண்ட் போகும் நேரம்னு எழுதி போர்டுராங்க கவுன்சிலர்கள் ஆனால் அண்ணாநகர் பகுதிகளில் எழுதிபோடுவதே இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory