» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்ற வாலிபர் கொலை : கொள்ளையர்கள் 2பேர் கைது

புதன் 24, மே 2023 1:34:16 PM (IST)

புதியம்புத்தூர் அருகே லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்ற வாலிபரை கொலை செய்த கொள்ளையர்கள் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர்  கழுகாசலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார் (38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 18-ந்தேதி இரவு புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் கற்கூரணி குளத்தின் தெற்கே மேற்கு நோக்கி செல்லும் காத்தாடி மண் பாதையில் 100 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரத்தக் காயங்களுடன் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அங்கு குடிபோதையில் நின்ற மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிகரன் (23), வெங்கடேஷ் (22) ஆகிய இருவரும் வழிமறித்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர். அவர்களை இறக்கி விடும்போது சதீஷ்குமாரிடம் பணம் இருக்கா என கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) விசாரணை நடத்தி சதீஷ்குமாரை அடித்து கொன்ற ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

ivanungalaiமே 26, 2023 - 03:23:20 PM | Posted IP 162.1*****

47வருஷம் ஜெயிலில் போடவும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory