» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழைய முடியாத நிலை? சோதனை ஓட்டம் தோல்வி

வெள்ளி 12, மே 2023 2:54:27 PM (IST)தூத்துக்குடியில் ஸ்மார்ட்சிட்டி நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி நிதியில் ரூ.53 கோடி விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையத்தில் 20 பேருந்துகள் நிறுத்துமிடத்தில் இயக்க முடியாத நிலையை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சோதனை ஓட்டத்தில் கண்டுபிடித்தனர். பேருந்து நிலையத்தில் இயக்க மேலும் பஸ்கள் காலதாமதம் ஏற்படுவதாக துகர்வோர் அமைப்பு கண்டனம் தெரிவித்தது. 

இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் பேரவை தலைவர் பி.ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி பாளை ரோட்டில் அண்ணா பேருந்து நிலையம் 1.36 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்தது. அ.தி.மு.க.ஆட்சியில் மறைந்த முதல்வர் அம்மா தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுத்தார். வியாபாரிகள், சில அரசியல் கட்சியினர் தங்கள் சுயலாபத்திற்கு எதிர்த்ததால் காலதாமதம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியை மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்தது. 

மத்திய, மாநில அரசுகள் தலா ரூ 500 கோடி என மொத்தம் ரூ.1600 கோடி நிதியை வழங்கியது. தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி நிதியில் விரிவாக்கம் செய்ய அரசு 8.10.2018ல் ரூ 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனாலும் பேருந்து அண்ணா பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு தூத்துக்குடி மீனாட்சிபுரம் அரசு போக்குவரத்து கழக 2 ஏக்கர் பணிமனை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே பனிமணைக்கு இடம் ஒதுக்கீடு தர சம்மதம் தெரிவித்தது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ரூ 53 கோடி ஸ்மார்ட் சிட்டி நிதியில் விரிவாக்கம் செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. தூத்துக்குடி பழைய நிலையம் விரிவாக்க பணிகள் தொடங்கி 1 ஆண்டு,6 மாதத்தில் முடிந்து தர ஒப்பந்ததாரரை அரசு கேட்டுக்கொண்டது. 2013ம் ஆண்டு இன்று வரை தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைய வில்லை. இரண்டு ஆண்டுகளில் உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு 7 தடவையும், தூத்துக்குடி தொகுதி அமைச்சர் கீதாஜீவன் 5 தடவையும், கனிமொழி எம்.பி 7 தடவையும் பணியை பார்வையிட்டுள்ளனர்.

மாநகராட்சி மேயர் ஜெகன் ஓராண்டில் 4 தடவையும் பணியை பார்த்து சென்றார். வியாபாரிகளுக்கு 110 கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, மக்கள் உள்ளே வந்து இருக்கை வசதி ஏற்பாடு செய்யப் பட்டதாக மாநகராட்சி மேயர் ஜெசுன் தெரிவித்தார். அமைச்சர்கள் பேருந்து நிலையம் பணிகள் 90% முடிந்துள்ளது. மார்ச், ஜுன் மாதத்திற்குள் முடியும் வாய் சொல் அறிவிப்போடு சென்றுவிடுவர். ஜுன் 3 ந் தேதி கருணாநிதி பிறந்தநாள் வருகிறது. அதற்குள் நிறக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.  ஆனாலும் பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. 

அவசர கோலத்தில் நடந்துள்ள பேருந்து விரிவாக்க நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்தை நிறுத்துமிடத்தில் இருந்து இயக்கி வெளியே வரும் சோதனை ஓட்டத்தை பார்வையிட்டனர்.இந்த சோதனை ஓட்டத்தில் உள்ளே உள்ள 29 பேருந்துகள் வெளியே எடுக்க முடியாத நிலைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி 400 பேருந்துகள் தினசரி வந்து செல்லும், தற்போது ஸ்மார்ட் சிட்டி நிதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட கால நேரத்தில் பேருந்து களை இயக்கி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்துமிடம் கட்டுவதற்கு முன்பு பேருந்துகனை நிறுத்தி சோதனை செய்து. அதற்கு தகுந்தாற் போல் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். தற்போது நிலையால் பேருந்துகள் இயக்க முடியாத நிலையை உருவாக்கிய தர கட்டுப்பாடு அலுவலர், பொறியாளர், ஸ்மார்ட் சிட்டி திட்ட அலுவலர் ஆகியோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நுகர்வோர் பேரவை தலைவர் பி.ஜனார்த்தனன் வலியுறுத்தினார்.


மக்கள் கருத்து

RexAமே 14, 2023 - 09:25:54 PM | Posted IP 172.7*****

எல்லா பஸ் ஸ்டாண்டும் smart city என்ற பெயரில் வணிக வளாகமாக மாற்ற பாடுவது கண்டனதுக்குறியது

சங்கர்மே 13, 2023 - 08:57:37 PM | Posted IP 172.7*****

திறமையான மாநகராட்சி அதிகாரிகள் இல்லாததே காரணம் குறுகலான தெருவிலிருந்து பேருந்துகள் உள்ளே நுழைவதே கஷ்டம் இதில் பிற்கால வளர்ச்சி கவனிக்கப்படவில்லை லஞ்சம் வாங்குவதில் உள்ள ஆர்வம் மக்கள் பணியில் இல்லை இது தூத்துக்குடி மக்களுக்கு உள்ள தீர்க்க முடியாத பிரச்சினை பாவம் என்ன செய்வது.தொடருமா இந்த நிலை

Premமே 13, 2023 - 07:13:24 PM | Posted IP 172.7*****

Better outskirt area,for future needs.no use for public current bus stand.people money looted,smart way of corruption.name sake smart City.

சுப்பிரமணியன்மே 13, 2023 - 10:34:13 AM | Posted IP 172.7*****

படித்தவன்பாட்டகெடுத்தான்எழுதியவன்ஏட்கெடுத்தான்.

Manithanமே 13, 2023 - 08:24:14 AM | Posted IP 172.7*****

Waste of people money

வசந்த குமார்மே 13, 2023 - 08:18:16 AM | Posted IP 172.7*****

இது பேருந்து நிலையத்துக்கு சரிப்பட்டு வராது. பேசாம இத வணிக வளாகமா மாத்திட்டு, பேருந்து நிலையத்தை ஏற்கனவே ஒதுக்கிய 5 ஏக்கர நிலத்தில் உருப்படியா கட்டுங்க.

T.Pethuselviமே 13, 2023 - 08:15:05 AM | Posted IP 172.7*****

Vanakkam please sweepers daily work panna mattikkanga suffer middle class people Perumal ther shunmugapuram Vannar 1,a nd2,3 Ella therukkalilum sakkadai daily clean pannamal sakkadai thanni thingies ullathu athanal veettirkul worms spread aakuthu please Geeta mam and jegan sir please immediate action

Davidமே 13, 2023 - 05:50:57 AM | Posted IP 172.7*****

பல கோடி வீன்.

செல்வகுமார்மே 12, 2023 - 10:32:27 PM | Posted IP 172.7*****

படிக்காதவர்கள் கூட அந்த கட்டத்தை பார்த்தவுடன் சொல்லிவிடுவார்கள் இவர்கள் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறார்களாம்... மானக்கேடு....

எதுமே 12, 2023 - 09:59:02 PM | Posted IP 162.1*****

இது பஸ் ஸ்டாண்ட்-ஆ??? நான் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று நினைத்தேன்...

Nameமே 12, 2023 - 08:49:41 PM | Posted IP 172.7*****

Bus standa athu nan apartment nu nenachen bus stand yen pa floor floora katirukanga

Tuty makkalமே 12, 2023 - 08:04:49 PM | Posted IP 172.7*****

Bustand keta sonna complex keti vechirukanunga.. makkal panam manna pochi.. contractor mela case podunga

வெ.முருகன்மே 12, 2023 - 06:58:58 PM | Posted IP 172.7*****

இந்த பணி 08/10/2018 யில் துவக்கப்பட்டது அப்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லை நேரடியாக அமைச்சர் வேலுமணி தலைமையில் வரை படம் தயரிக்க பட்ட திட்டம் தமிழ்நாட்டில் ஸ்மாட் சிட்டி பேருந்து நிலையம் எல்லாம் இப்படி தான் உள்ளது வெ.முருகன்

தமிழன்மே 12, 2023 - 05:36:50 PM | Posted IP 172.7*****

பல கோடி பணமெல்லாம் நஷ்டமா!

Kumarமே 12, 2023 - 05:10:12 PM | Posted IP 172.7*****

இனி ஒன்றும் செய்ய முடியாது என்று மாலாக மாற்றி பேருந்து நிலையத்தை ஊருக்கு வெளியே கொண்டு போகவேண்டியதுதான்

kannanமே 12, 2023 - 04:23:38 PM | Posted IP 172.7*****

Good News

Tamilanமே 12, 2023 - 04:08:19 PM | Posted IP 162.1*****

itharku karanamana athigarigal meethu kandippaga arasu nadavadikkaiedukkavendum...

manithanமே 12, 2023 - 03:32:32 PM | Posted IP 172.7*****

ithu bus stand illa new complex

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory