» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் முற்றுகை: தூத்துக்குடியில் பரபரப்பு!

திங்கள் 24, ஏப்ரல் 2023 11:47:09 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு சேர்ந்த சுமார் 200 பெண்கள் உட்பட 300 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வழக்கறிஞர் மணிகண்ட ராஜா தலைமையில் ஊர்வலமாக வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ரூரல் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினர். 

இதனால் போலீஸ்கருக்கும் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  பின்னர் 5பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஊர்வலத்தால் தூத்துக்குடி - பாளையங்கோட்டை ரோட்டில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து

Raj KumarApr 24, 2023 - 08:01:49 PM | Posted IP 162.1*****

இவர்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்

சாம்Apr 24, 2023 - 06:33:30 PM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைடை தீ வைத்து கொளுத்த வேண்டும்.

சாமிApr 24, 2023 - 01:18:30 PM | Posted IP 162.1*****

இப்போது ஒரு துப்பாக்கி சூடு நடத்தி 26 பேரை போடுங்கள் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory