» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தான முகாம்
சனி 25, மார்ச் 2023 4:18:45 PM (IST)

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ். ஜோயல் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் KSPS திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சத்யராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.எஸ்.பி.தேன்ராஜ், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குருதி கொடையாளர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். உதயநிதி மன்ற நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பலரும் இம்முகாமில் ரத்ததானம் செய்தனர். அரசு மருத்துவமனை ரத்ததான பிரிவு தலைவர் டாக்டர் சாந்தி தலைமையிலான ரத்த தான பிரிவு அலுவலர்கள் ரத்த தானம் பெற்றனர்.
முகாமை தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்துரை, மாவட்ட பொருளாளர் சேக் முகமது, மாவட்ட மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜோசப் ஜான், மாவட்ட துணை பொருளாளர் செந்தில், ராஜா, மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், திருச்செந்தூர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் காளீஸ்வரன், முருகன், புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர செயலாளர் ஜோ, மாநகர துணைத் தலைவர் அருண், மாநகர துணைச் செயலாளர் டினோ, மாநகர பொருளாளர் முகமது, துணை பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










