» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேச்சு
வெள்ளி 24, மார்ச் 2023 3:06:57 PM (IST)

"தமிழக அரசியல் அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது. பாஜக மற்றும் பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்" என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: எல்லா மாநிலங்களிலும் அரசியல் களம் மாறிவிட்டது. ஒரு கிளி 30 ஆண்டுகளாக கூண்டிற்குள்ளேயே இருக்குமா? அந்தக் கிளியை திறந்துவிட்டு, பாஜக வந்துவிட்டது, வளர்ந்துவிட்டது என்று கூறினால், அந்தக் கிளி யோசிக்கும். 30 ஆண்டுகளாக இந்த கூண்டிற்குள்தான் நான் இருக்கேன்.
திடீரென வந்து கூண்டை திறந்துவிட்டு என்னை பறந்துபோகச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று அந்தக் கிளி கேட்கும். இதுபோலத்தான் இப்போது தமிழகத்தில் ஆக்ரோஷமாக சில உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் கூண்டில் அடைப்பட்டிருந்த கிளி பறப்பதற்கு தயாராகிவிட்டது. தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. அது ரோட்டில் நடந்துசெல்லும் சாமானிய மனிதனின் கண்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.
பாஜகவினர் கூனிகுறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கலாம் பாஜகவினர். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸை விட பாஜக 45% அதிகமாகவே செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு உதவித் தொகையை அதிகப்படுத்தி யிருக்கிறோம். அனைவருக்கும் அத்தனை நலத்திட்டங்களை பாஜக ஆட்சி செய்துள்ளது" என்று அண்ணாமலை பேசினார்.
மக்கள் கருத்து
மனிதன்Mar 24, 2023 - 07:48:01 PM | Posted IP 162.1*****
digital thef.....
தமிழன்Mar 24, 2023 - 07:09:07 PM | Posted IP 162.1*****
தமிழக அரசியலில் நீண்ட காலத்திற்கு பிறகு சிறந்த ஒரு அரசியல் தலைவர் திரு .அண்ணாமலை என்பதை யாரும் மறுக்க முடியாது .படித்தவர், முற்போக்கு சிந்தனையாளர் ,சிறந்த நிர்வாகி மேலும் பல பன்முக திறமையால் சிறந்து விளங்குபவர் .இவர் முதல்வராக வருவதற்கு அனைத்து தகுதி உள்ளவர் .
தமிழ்Mar 24, 2023 - 04:21:17 PM | Posted IP 162.1*****
அன்பு சகோதரா... பி ஜே பி தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒரு நல்ல ஆளுமை என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். காமராஜருக்கு இணை தமிழகத்தில் யாரும் இல்லை ... கிடையாது ....
MASSMar 24, 2023 - 03:36:29 PM | Posted IP 162.1*****
Oo! appadiya?
தூத்துக்குடி மக்கள்Mar 24, 2023 - 03:24:27 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடிக்கு வருகை தரும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை வரவேற்கிறோம் .... காமராஜருக்கு பிறகு ஒரு சிறந்த ஆளுமைமிக்க தலைவரை உங்களைத்தான் மக்கள் பார்க்கிறார்கள்....
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











ராமநாதபூபதிMar 25, 2023 - 10:00:41 AM | Posted IP 162.1*****