» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்கு
வெள்ளி 24, மார்ச் 2023 2:49:45 PM (IST)

தூத்துக்குடியில் மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது
இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராமகிருஷ்ண ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
குடிMar 24, 2023 - 07:52:17 PM | Posted IP 162.1*****
போதை டெஸ்ட் எடுத்தால் என்ன பஸ்ஸில் ஏறும் முன்..
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)











விடியல் படையல் வடையல்Mar 25, 2023 - 02:31:46 PM | Posted IP 162.1*****