» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)
தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 சவரன் தங்க நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் ராமச்சந்திரன் (74) என்பவர் கடந்த 10.03.2023 அன்று தனது மனைவியுடன் விளாத்திகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது அத்தையான காமாட்சி (98) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் வீட்டில் பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து மேற்படி ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் திவீர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த பரமசிவன் மகன் கருவேலமுத்து சங்கர் (22) என்பவர் மேற்படி ராமச்சந்திரன் வீட்டிற்குள் புகுந்த தங்க நகைகளை திருடி தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கருவேலமுத்து சங்கரை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூ.2லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 13 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











ஆண்டMar 21, 2023 - 05:33:53 PM | Posted IP 162.1*****