» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!

செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ்,  இன்று (21.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவமனையில் லிப்ட் பழுது தொடர்பாகவும் மற்றும் கழிவுநீர் வடிகால் பிரச்சனை தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். மேலும் தாய்மார்கள் பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டேன். 

உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றி வந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் என்பவரை முன்னாள் பேரூராட்சி தலைவர் திட்டியதால் அவர் விஷம் அருந்தியுள்ளார். உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன். தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் அவர்களின் மனைவி மற்றும் மகளை சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தேன். 

இதுதொடர்பாக உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷாகல்லாசி மீது வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவில்பட்டி - கயத்தார் பகுதியில் எலுமிச்சை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியின் 2 குழந்தைகள் லோடு ஆட்டோ மோதிய விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

அவர்களில் ஒரு குழந்தை நன்றாக உள்ளது. மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களையும் பார்வையிட்டேன். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ்,  தெரிவித்தார்.ஆய்வில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெபமணி மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory