» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பார்க்கிங் இடங்கள் ஆக்கிரமிப்பு: மேயர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 20, மார்ச் 2023 3:38:43 PM (IST)

தூத்துக்குடியில்  பார்க்கிங் பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. மாநகரில் எந்த ஒரு பகுதியிலும் முழுமையாகசாலை பணிகள் ஏதும் முடிவடையாத நிலையில் வாகன போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியின் ஒரே முதன்மை சாலையான தமிழ் சாலையின் வ.உ.சி கல்லூரி அருகேயுள்ள இணைப்பு சாலை முதல் ராஜாஜி பூங்கா வரை சாலை முழுமையாக தனியார் இரவு நேர கடைகளாலும், மீன் சந்தை மற்றும் காளான் போல் முளைத்துள்ள இட்லி கடைகளாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அந்த இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அந்தபகுதியில் நிறுத்தம் செய்ய முடியாமல் சாலை நடுவே இட்டு செல்வதினால் மிகுந்த வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கேட்டால் ஆளும்கட்சியை சார்ந்த நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி வருகின்றனர். மாநகர நிர்வாகம் சாலையில் பார்க்கிங் செய்யுமிடங்களை ஆக்கிரமித்து விளையாட்டு பொருட்கள், பேருந்துகளில் மீன் வியாபாரம் என வணிக நோக்கில் செயல்படும் ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி வாகன நெருக்கடி மற்றும் பார்க்கிங் வசதியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ஜாலி ஆபிரகாம்Mar 22, 2023 - 11:30:51 PM | Posted IP 162.1*****

பிரயன்ட் நகர் கிழக்கு சாலை, பிராயன்ட் நகர் குறுக்கு தெரு (12 ,11,10,9,8,7,6,5,4,3,2,1) , பிரயன்ட் நகர் போலீஸ் க்வேடர்ஸ் தெரு மேற்கு , ஆசிரியர் காலனி , வள்ளிநாயகம் புறம் , அண்ணாநகர், கணேசன் காலனி, போல்டன்புறம் இதனை சுற்றி உள்ளது அனைத்து சாலைகளும் பைப் வேலைகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்து வகனங்கள் செல்ல ஏதுவாக இல்லை.மாநகராட்சி நிர்வாகம் விரைந்து இந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கும் பொழுது அக்கரமிபுகள் தானாக அகற்றப்படும்.

பழனி முருகன்Mar 21, 2023 - 09:31:09 PM | Posted IP 162.1*****

மேலரதவீதியில் மாத கணக்காக கார் நிறுத்துமிடமரக உள்ளது.இதனை மாநகராட்சி கண்டும் காணாத போல் உள்ளது. சித்திரை தேரோட்டம் நடைபெறும் பொழுது மட்டும் கார்கள் நிற்பது இல்லை.அன்றைய தினம் மட்டும்.

SunderMar 21, 2023 - 04:39:09 PM | Posted IP 162.1*****

Person plaza

பெ.ராமர் தூத்துக்குடி நகரவாசிMar 21, 2023 - 03:33:29 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி பிரதான சாலைகள் WGC ROAD VE ROAD இவை இரண்டும் ஒரு வழி பாதைகள். ஆனால் இப்பொழுது இவை இருபுறமும் இருசக்கர, கனரக(நான்கு சக்கர) வாகனங்களால் நிரந்தரமாக ஆக்கிரமிப்பு. மேலும் ஒரு வழி பாதையாக கடைபிடிக்கப்படவில்லை. இது போல் பல சாலைகளும் நிரந்தரமாக பழுதான வாகனங்கள் கனரக மின்மோட்டார் வாகனங்கள் செங்கல் மணல் ஜல்லி என விற்பனை பொருட்களின் ஆக்கிரமிப்பு என இரவும் பகலும் தொடர்வது பாதிப்பை கொடுக்கிறது மக்களுக்கு. இது போன்ற நிரந்தர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டால் மட்டுமே போக்குவரத்து சீராகும். மேலும் புதிதாக கட்டப்பட்ட வடிகால்கள் நகரம் முழுவதும் 90சதம் ஆக்கிரமிப்பு அதனால் நடைபாதையை பயன் படுத்தமுடியால் சாலைகளில் நடந்து செல்வதால் மேலும் போக்குவரத்திற்கு கூடுதல் இடைஞ்சல் ஏற்படுகிறது. இவற்றின் மீது உரிய கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தூத்துக்குடி நகரம் போக்குவரத்தில் முன்றேற்றம் காண்பது திண்ணம்.

TN69Mar 20, 2023 - 09:31:49 PM | Posted IP 162.1*****

தமிழ் சாலை, பாளையங்கோட்டை சாலை, சத்ரம் பஸ் ஸ்டாப் முதல் பழைய Harbor வரை வஉசி காலேஜ் முதல் 3ம் இல் வரை ஆக்ரமிப்பு கடை கட்டிடங்களை உடைத்து நொறுக்குமா? நம் முத்துநகர் (மா)நகராட்சி?😳🙏சென்னை பழைய வண்ணாரபேட்டையில் உடைத்து தொறுக்கி அப்புறப்படுத்தியது போல முடியுமா? நடக்குமா? இங்கு😁😄😃😀🤣😂😅😭😭😭 தூத்துக்குடில

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory