» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

சனி 18, மார்ச் 2023 11:52:12 AM (IST)தூத்துக்குடியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மருத்துவர்களுக்கு உள்ளதுபோல், ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உயர்கல்வி இடஓக்கீடு, கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பர நகர் விவிடி சிக்னல் அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக் கிளை சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைச் செயலாளர் இராமசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவகங்கை ரெங்கராஜன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார்.  இதில் சங்க நிர்வாகிகள் இரா. முருகன், ந.தங்ககுமார், த. பேச்சிமுத்து, ரெக்ஸலின், விண்ணரசி, ஞா.தங்கராஜன், ஞா.சுதாகர் யாபேல் சந்தோசம், க.தேவிகா, ஜோ.சாலமோன், வி.லியோ பிரின்ஸ் சாம், சு.ஜெயராஜ், இ.தியாகராஜன், இந்திராணி, ஜெ.மகேஷ்துரைசிங், நீர்மல்கோயில்ராஜ், சுரேஷ்குமார் ஜெ.மகாலிங்கம், அந்தோணி ஆரோக்கியராஜ் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

JebasinghMar 19, 2023 - 06:53:25 PM | Posted IP 162.1*****

தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் & அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் ஒரே அளவில் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நநடத்தலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory