» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மக்களுக்கு தரமான பால் கிடைக்க நடவடிக்கை தொடரும் : ஆட்சியர் பேட்டி!
திங்கள் 6, மார்ச் 2023 10:26:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தரமான பால் சரியான அளவில் சென்றடைவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று (06.03.2023) ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: பாலில் கலப்படம் செய்வது, தண்ணீர் கலப்பது குற்றம். பாலில் கலப்படம் செய்வதற்காக பவுடர் உள்ளிட்டவற்றை கலப்பது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது.
அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், கலப்படம் இல்லாத பால் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை, பால் வளத்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல் துறை, மாநகராட்சி இணைந்து மாநகராட்சி பகுதியில் கலப்படம் இல்லாத பால் மக்களுக்கு கிடைப்பதற்காகவும், கலப்படம் செய்யப்பட்ட பாலை பறிமுதல் செய்வதற்காகவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் மருத்துவமனை பகுதிகளில் பாலின் தரம் குறித்து கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை செய்து 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல அளவீடு கருவிகளும் முறையாக இல்லை. 500 மில்லி லிட்டர் என்றால் 450 மில்லிலிட்டர் தான் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தரமான பால் சரியான அளவில் சென்றடைவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார். ஆய்வில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
