» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வடமாநில தொழிலாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை : எஸ்பி அறிவுறுத்தல்!
ஞாயிறு 5, மார்ச் 2023 7:28:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 4000 ற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்படி வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் அனல்மின் நிலைய கட்டுமான பகுதிக்கு இன்று (05.03.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கு புரிவதற்காக இந்தி மொழியிலேயே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மேற்படி காவல் அதிகாரிகள் பேசுகையில், தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும், தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகிய எனது தலைமையில் தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் உள்ளோம், நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை,
உங்கள் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் காவல்துறை உள்ளது, மேலும் உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு பணிபுரியுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் மற்றும் அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வின் போது சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
