» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு

சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

தூத்துக்குடி, முத்தையாபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கம், உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசீலன் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளராகவும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து காலியிட இருப்பிலும், காலியிட இருப்பில் இருந்த சாந்தி கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளராகவும், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளராகவும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காலியிட இருப்பில் இருந்த வீரசோலை விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளராகவும், மதுரையில் காலியிட இருப்பில் இருந்த பிரேம் ஆனந்த் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory