» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமையல் செய்தபோது தீவிபத்து : கணவன்- மனைவி பலி

வெள்ளி 3, பிப்ரவரி 2023 10:46:21 AM (IST)

கோவில்பட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் சர்க்கரை மகன் சண்முகபாண்டி (70), இவரது மனைவி ராமலட்சுமி (60). கடந்த 1ஆம் தேதி கேஸ் அடுப்பை சரியாக அடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலையில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கணவன்-மனைவி இருவரும் உடல் கருகி பலத்த காயம் அடைந்தனர். 

அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory