» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஸ்டுடியோவில் ரூ.2 .5 லட்சம் பொருட்கள் திருட்டு

வெள்ளி 3, பிப்ரவரி 2023 8:17:15 AM (IST)

தூத்துக்குடியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் ஸ்டூடியோ பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகேஷ் (43). இவர் எட்டயபுரம் ரோடு மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். நேற்று காலையில் வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், கடையின் உள்ளே சென்று பார்த்து உள்ளார். 

அப்போது கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள கேமிரா, பிளாஷ், பேட்டரி சார்ஜர், லென்ஸ் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி முள்ளக்காடு நேருஜி நகரைச் சோ்ந்தவா் பொன் விக்னேஷ் (26). இவா் முள்ளக்காடு சந்திப்பு பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வருகிறாா். இவா் நேற்று முன்தினம் இரவு தனது ஸ்டுடியோவை பூட்டிவிட்டு சென்றாா். நேற்று காலையில் வந்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த ஒரு கேமரா திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து முத்தையாபுரம் போலீஸில் புகாா் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஆண்டFeb 3, 2023 - 10:30:58 AM | Posted IP 162.1*****

பரம்பரை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory