» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேக்கரிக்கு சீல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

வெள்ளி 3, பிப்ரவரி 2023 8:00:16 AM (IST)



வேம்பாரில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கிய பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவுத் தொழில் சாா்ந்த வணிகா்கள், உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில் புரிந்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மாரீஸ் தலைமையில், புதூா் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் சிவா அடங்கிய குழுவினா் வேம்பாரில் திடீா் ஆய்வு நடத்தினா். 

சோதனையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஐய்யனார் பேக்கரி நிறுவனம் உரிமம் காலாவதியான பின்னரும் இயங்கியது தெரியவந்தது. மேலும் பேக்கரியில் உரிய லேபிள், விபரங்களின்றி வைத்திருந்த பிரட், பண் உள்பட 30 கிலோ அளவுள்ள உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக பேக்கரியை மூடுவதற்கு உடனடியாக மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் அனுமதி பெற்று பேக்கரியை புதூர் மற்றும் விளாத்திகுளம்பகுதி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளால் மூடி சீல் வைக்கப்பட்டது.

இதுதவிர வேம்பார் பேருந்து நிறுத்தத்தில் இயங்கிவந்த பிரபலமான இந்தியன் மளிகை கடையும் மூடப்பட்டது. பொதுமக்கள் நலன்கருதி  இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் எனவே உரிமம் இல்லாத அல்லது உரிமம் காலாவதியான வணிகர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற்றபின்னரே வணிகம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன் பிரிவு 55,58 மற்றும் 63 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை அறிவிப்பையும் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

KumarFeb 3, 2023 - 09:00:17 AM | Posted IP 162.1*****

👍

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory