» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 2, பிப்ரவரி 2023 11:11:23 AM (IST)

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகள் சுபபிரியா (15), சில்லாநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்து, எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

என்னFeb 2, 2023 - 02:10:25 PM | Posted IP 162.1*****

கொடுமை சார் இது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory