» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூகவலைதளத்தில் அவதூறு : மீன் வியாபாரி கைது

புதன் 25, ஜனவரி 2023 7:34:01 AM (IST)

கோவில்பட்டி அருகே சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜி என்ற விஜயபாண்டியன் (47). மீன் வியாபாரி. இவர் ஒரு சமுதாயத்தை பற்றி அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டு, சமூகவலைத்தளத்தில் பரப்பி உள்ளார். இதை தொடர்ந்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory