» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் வெட்டிக் கொலை! - போலீஸ் விசாரணை

திங்கள் 23, ஜனவரி 2023 3:31:42 PM (IST)

தூத்துக்குடியில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்கில் போலீசார் கணவரை கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெயமுருகன் (74). தொழிலாளி. இவரது மனைவி சுதந்திரகனி (60). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகனை தவிர அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். ஜெய முருகனுக்கு குடிபழக்கம் உள்ளது. 

தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம். சம்பவத்தன்று இரவில் ஜெயமுருகன் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனை சுதந்திரகனி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெயமுருகன் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே இதுதொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதந்திரகனி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜன் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory