» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆளுநரை இழிவாக பேசுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? நடிகை குஷ்பு பேட்டி

வியாழன் 12, ஜனவரி 2023 1:33:14 PM (IST)ஆளுநரை இழிவாக பேசுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ கேள்வி எழுப்பினார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகிறார் ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார் முறையாக விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம் ஈசாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது. 

முறையாக விசாரணை நடைபெற வேண்டும். சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி போயா என்று இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிட மாடலா? நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்து மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அனைவரும் ஒன்றிணைந்து தான் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரவித்தார்.


மக்கள் கருத்து

saniyanJan 12, 2023 - 04:30:39 PM | Posted IP 162.1*****

athu apdithan pesum

A.SOLOMON RAJAJan 12, 2023 - 04:02:16 PM | Posted IP 162.1*****

KUSHBOO TAMILNADU KARIYA ERUNTHA THERIUM EVALUM OOLAIKA VANTHAVA THAN. ATHANALA EVALUKU TAMILNADU THAMILAGAM DIFFERENT FEEL THERIYATHU

நீங்களேJan 12, 2023 - 03:49:59 PM | Posted IP 162.1*****

இங்கிலாந்து பிரதமராக கூடிய திறமை படைத்த , அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடும் அண்ணன் செபாஸ்டியன் சீமான் கட்சியில் இருந்தார்.

MASSJan 12, 2023 - 02:55:57 PM | Posted IP 162.1*****

appadiya

நீJan 12, 2023 - 01:37:31 PM | Posted IP 162.1*****

இதுக்கு முன்னாடி எந்த கட்சில இருந்த?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory