» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலரங்கம் : அமைச்சர் பெ.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

சனி 7, ஜனவரி 2023 3:25:57 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை பயிலரங்க நிகழ்ச்சியினை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறை சார்பாக தொடர்கல்வி பயிலரங்க நிகழ்ச்சியான "நம்மைக் காப்போம் 23" நிகழ்ச்சியை  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன்  தொடங்கி வைத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தயாரிக்கப்பட்ட விழா மலர் புத்தகத்தினை வெளியிட்டார்,

விழாவில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி,  சுகாதாரத்துறை அமைச்சர்  ஆலோசனையின்படி பாதுகாப்பான அறுவை சிகிச்சைகள் செய்வது தொடர்பாக பயிற்சி நடத்தப்பட்டது.  பயிற்சியில் நமது மாவட்டத்தில் இருந்து 520 பேர் பங்கேற்றார்கள் என்று தெரிவித்தார்கள். தமிழ்நாடு அளவில் முதன்முதலாக ‘நம்மைக் காப்போம் 23” நிகழ்ச்சியினை நடத்துவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில்தான். இங்கு வழங்கப்படும் மருத்துவக்குறிப்புகள் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு செல்லும்போது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

கடவுளைப்போல் மருத்துவர்கள் நம்மை காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் உங்களை சந்திக்கிறார்கள். மருத்துவத் துறையில் ஈடுபட வேண்டுமென்றால் நிறைய அர்ப்பணிப்பு,  தியாகங்கள் செய்ய வேண்டும். மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்த உங்களின் சமுதாயம் மற்றும் பணியின் மீது அக்கறையை புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என  சமூக நலன் அமைச்சர் பெ.கீதாஜீவன்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில் ராஜ்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்  கு.சிவக்குமார், முடநீக்கியல் துறைத் தலைவர் பாவலன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  மருத்துவர் மாரிமுத்து, அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, மருத்துவர்கள் ஜேம்ஸ் சுந்தர்சிங், வி.ஏ பிரபு அலாய், பிரபு, மகேஷ் ராம், மகேஸ்வரன், கந்தசாமி, தினேஷ்ராஜ், மகிழ் ஜான் சந்தோஷ், விஜயா சொரூபன் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள்,  மாணவர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory