» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.7லட்சம் வாக்காளர்கள் : இறுதி பட்டியல் வெளியீடு!

வியாழன் 5, ஜனவரி 2023 11:42:25 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியலில் 7,52,023 பெண்கள், 215 மூன்றாம் பாலினத்தோரை உட்பட மொத்தம் 14,70,962 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலா / மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 09.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடத்தப்பட்டது. 

முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற்றது. முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்திட 27,216, பெயர் நீக்கிட 12,210, முகவரி மாற்றம், பெயர் மாற்றத்திற்கு 12,295 என மொத்தம் 52,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1,170 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 50,951 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 7,18,724 ஆண் வாக்காளர்கள், 7,52,023 பெண் வாக்காளர்கள் மற்றும் 215 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14,70,962 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், பொதுமக்கள்; இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது விபரங்கள் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் வட்டாட்சியர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 62.52 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 

இப்பணிகள் வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இணையதளம் வழியாகவும் இணைக்கலாம். மேலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்றும் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவரும் வாக்காளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேசிய வாக்காளர் தினமான 25.01.2023 அன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பது போன்றவை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடைபெற உள்ளது. கல்லூரிகளிலேயே முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும். மூத்த வாக்காளர்கள் அதாவது 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  கண்ணபிரான், பழனி(தி.மு.க.), முத்துமணி (காங்கிரஸ்), அக்னஸ் (தி.மு.க.), ஜி.பாஸ்கர் (தி.மு.க.), டி. ஆர்.மணிகண்டன் (பகுஜன் சமாஜ் கட்சி), என்.ஜி.ராஜேந்திரன் (வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்;சங்கம்) எல்.கிஷோர்குமார், (பா.ஜ.க.), என்.தேவகுமார் (பா.ஜ.க.), என்.நாராயண மூர்த்தி (தே.மு.தி.க.), எஸ். சின்னத்துரை (தே.மு.தி.க.), எ.செல்வம், (தே.மு.தி.க.), எஸ்.ஆர்.ஆனந்த சேகரன் (தி.மு.க.), ஐ.ரவி (இளைஞர் அணி), தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, எ.சந்தாணம் (அ.இ.அ.தி.மு.க), தா.ராஜா (சி.பி.ஐ. - எம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.      

இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 7,18,724 ஆண் வாக்காளர்கள் 7,52,023 பெண் வாக்காளர்கள் மற்றும் 215 மூன்றாம் பாலினத்தோரை சேர்த்து ஆக மொத்தம் 14,70,962 வாக்காளர்கள் உள்ளனர்.



வாக்குச்சாவடிகள்: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 1619 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவ்வாக்குச்சாவடிகள் 883 மையங்களில் அமைந்துள்ளது.



தூத்துக்குடி தொகுதி



தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர் இறுதிப் பட்டியலினை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, வெளியிட்டார். 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 ஆம் ஆண்டுக்கான பணி கடந்த 09.11.2022 முதல் 08.12.2022 வரை 90 மையங்களில் நடைபெற்றது. 09.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 27,8961 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்தல், இறப்பினை நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 284. மேற்கண்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 281643 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 137647, பெண் வாக்காளர்கள் 143923 இதரபிரிவினர் 73 ஆகும். தற்போது வெயிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 0.95 சதவிகிதம் கூடுதல் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி வட்டாட்சியர், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory