» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும்: அமைச்சர் நேரு பேட்டி!

திங்கள் 2, ஜனவரி 2023 11:54:32 AM (IST)தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் வருகிற மார்ச் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் மாநகராட்சி பழைய பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (02.01.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.53.40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய பணிகள், ரூ.14.96 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வணிக வளாகப் பணிகள், ரூ.22.60 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வி.வி.டி. சாலை பணிகள் ஆகியவை இன்று ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

பிப்ரவரி மாதம் இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 10 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்க இந்திய ஆட்சிப்பணி அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஆய்வில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, இயக்குநர் பேரூராட்சிகள் கிரண் குராலா, மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory