» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திடீர் போக்குவரத்து நெருக்கடி : வாகன ஓட்டிகள் அவதி!

திங்கள் 5, டிசம்பர் 2022 11:03:30 AM (IST)



தூத்துக்குடியில் மழைநீர் அகற்றும் பணிக்காக போக்குவரத்து மிகுந்த சாலையில் லாரியை நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே இன்று காலை லாரியை நிறுத்தி மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வோர், அலுவலகம் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதுபோன்று விவிடி சிக்னல் பகுதி உட்பட நகரின் பிராதான சாலைகளில் லாரிகளை நிறுத்தி மழைநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, மழைநீர அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் அதிகாலையில் அல்லது மாலை வேளைகளில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர. 


மக்கள் கருத்து

NameDec 7, 2022 - 01:57:42 PM | Posted IP 162.1*****

Padichavana velaiku yedukurangala nu doubta irukuthu nalla iruntha road la platform katitu road sizea kammi panina ipad than agum

TN69Dec 7, 2022 - 07:31:59 AM | Posted IP 162.1*****

ஒரு லாரி, பஸ் அகலத்திற்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி சாலைகள் அமைந்துள்ளது. மக்கள் நெருக்கம் பெருக பெருக இன்னும் பயங்கரமான நெருக்கடி இருக்கும். நம் மேயர் நடவடிக்கை எடுப்பாங்களா? மாநகர முக்கிய சாலைகளை அகலப்படுத்த!

TN69Dec 7, 2022 - 07:23:31 AM | Posted IP 162.1*****

ஒரு லாரி, பஸ் அகலத்திற்கு மட்டுமே ஸ்மார்ட் சிட்டி சாலைகள் அமைந்துள்ளது. மக்கள் நெருக்கம் பெருக பெருக இன்னும் பயங்கரமான நெருக்கடி இருக்கும். நம் மேயர் நடவடிக்கை எடுப்பாங்களா? மாநகர முக்கிய சாலைகளை அகலப்படுத்த!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory