» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குருஸ் பர்னாந்து மணிமண்டபத்திற்குஇடம் ஒதுக்கீடு : தூத்துக்குடி மாநகராட்சியில் தீர்மானம்!

திங்கள் 31, அக்டோபர் 2022 3:12:56 PM (IST)தூத்துக்குடியில் குருஸ் பர்னாந்து மணிமண்டபத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாநகராட்சியின் அவசர கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு குருஸ் பர்னாந்துக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ரோச் பூங்கா பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதால் மாநகர மையப் பகுதியில் அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. 
இதையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அறிவுரையின்படி நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்காவில் 20 சென்ட் இடம் கிழக்கு பகுதியில் ஒதுக்கப்பட்டு அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். 
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் குருஸ் பர்னாந்து மணிமண்டபம் இடஒதுக்கீட்டிற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல் உள்ளாட்சி அமைப்புகளில் நகர்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்ட வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்த ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் ஒருநபரை வார்டு குழு உறுப்பினராக பகுதி சபா உறுப்பினர்கள் தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  குருஸ் பர்னாந்து மணிமண்டபம் தீர்மானம் நிறைவேற்றியதற்கு மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள்  தனசிங், காந்திமதி, சேகர், நகர்நல அலுவலர் அருண்குமார், மற்றும் கவுன்சிலர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory