» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ரூ.19.17 லட்சம் மதிப்பில் சாலை: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

வியாழன் 6, அக்டோபர் 2022 8:21:14 AM (IST)கோவில்பட்டியில் புதிய சாலை, மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார். 

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.97 லட்சம் மதிப்பில் பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜ் நகா் மேற்கு பகுதியில் பேவா் பிளாக் சாலை, ரூ.9.20 லட்சம் மதிப்பில் பாலாஜி நகா் முதல் தெருவில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலை மற்றும் வாருகாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ நேற்று திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, ராஜீவ் நகா் பிள்ளையாா் கோயில் அருகில் ரூ.12 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, புதிய பைப் லைன் மற்றும் போா் அமைக்கப்பட்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் ராஜீவ் நகா் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பணியையும் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory