» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர சேவை 6 மாதங்களில் துவங்கும் : கனிமொழி எம்.பி.தகவல்

செவ்வாய் 28, ஜூன் 2022 8:13:23 AM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்னும் 6 மாதத்தில் இரவு நேர விமான சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியது: தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓடுதளத்தை மேலும் நீட்டிக்கும் பணியும், அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகின்றன. மேலும், புதிதாக முனையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விரிவாக்கப் பணிகள் முடிவுற்றதும் சரக்கு விமான போக்குவரத்து, பெரிய வகை பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கப்படும். இரவு நேரத்தில் விமான போக்குவரத்து சேவை தொடா்பான அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. ஓடுதளத்தில் மட்டும் கொஞ்சம் பணிகள் மீதமுள்ளன. இன்னும் 6 மாதங்களில் அந்தப் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இருப்பினும், 4 மாதங்களுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. லோக. பாலாஜி சரவணன், விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory