» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு

புதன் 20, அக்டோபர் 2021 8:43:06 AM (IST)



திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு மீட்கப்பட்டு பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்டது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று மாலையில் சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் கால்நடை உதவி டாக்டர் பொன்ராஜ் பிரேத பரிசோதனை செய்த பின்னர், கடல்பசு கடற்கரையில் புதைக்கப்பட்டது.

இந்த கடல் பசுக்கள் பெரும்பாலும் ஆழ்கடலில் தெளிந்த நீரோட்டம் உள்ள இடங்களில் வாழ்ந்து வருகின்றன. மாசு கலந்த பகுதிக்கு கடல் பசுக்கள் செல்வது இல்லை. உயிரிழந்த இந்த கடல் பசு வழி தவறி கரையோரம் வந்ததால் பார்வை இழந்து பாறையில் அடிபட்டு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory