» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தருவைக்குளத்தில் மகளிர் மேம்பாடுக்கான சுயதொழில் பயிற்சி
செவ்வாய் 22, ஜூன் 2021 5:33:49 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கிராமப்புற மகளிரை மேம்படுத்தும் இரண்டு வார ஆரி கலைப் பயிற்சி தருவைக்குளத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி லூசியா ரோஸ் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இப்பயிற்சியில் தருவைக்குளத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். துவக்க விழாவில் தூய மரியன்னைக் கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், கணிதத்துறை உதவி பேராசிரியை பிரிசில்லா பசிபிகா மற்றும் தருவைக்குளம் முன்னாள் பங்குதந்தை எட்வர்ட் மற்றும் தருவைக்குளம் பங்கு தந்தை வின்சென்ட், ராஜாத்தி, ஜெயமேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பயிற்சியின்போது வடிவமைக்கப்பட்ட ஆடைகள் காட்சி படுத்தப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கரோனா பரவலின் இரண்டாம் அலையை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உன்னத் பாரத் அபியானின் பெரணியல் அசிஸ்டெண்ட் பண்ட்டோடு இணைந்து வழங்கிய இந்த திட்டத்தில் எம் கல்லூரியின் மாணவிகள் மற்றும் தருவைக்குள ஊர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த பயிற்சி மேலும் ஒரு வாரம் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது: தூத்துக்குடி பூ மார்க்கெட் டாஸ்மாக் கடை மூடல்!
வெள்ளி 5, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தூத்துக்குடியில் கொத்தனார் படுகொலை: அண்ணன், தம்பி உள்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 5, ஜூன் 2026 7:30:17 PM (IST)

தருவைகுளம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:41:57 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

ஜமாபந்தியில் இதுவரை மொத்தம் 309 மனுக்கள் : 19 பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:57:58 PM (IST)

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் : திடக்கழிவு மேலாண்மை அறிமுகம்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:22:59 PM (IST)










