» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை 8 வாரத்திற்குள் சீரமைக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
புதன் 27, ஜனவரி 2021 11:39:27 AM (IST)
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முதல் காமராஜ் கல்லூரி வரையிலான ஜார்ஜ் ரோட்டை 8 வாரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி டவுண், தூய பனிமயமாத கோவில் முதல் காமராஜ் கல்லூரி வரை செல்லும் ஜார்ஜ் ரோடு எனப்படும் சாலை கடந்த 4 மாதங்களாக புதிய சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த சாலையானது உடைக்கப்பட்டு சேதப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மாதாகோவில் தெரு, மரக்குடி, ரோச் காலனி, லயன் ஸ்டோன், தோமையார் கோவில், தாமஸ்நகர், பாத்திமா நகர், சண்முகபுரம், வஉசி மார்க்கெட் செல்லும் மக்களும் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அந்த பகுதி வழியாக திருச்செந்தூர் சாலை செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த சாலையை கடந்து செல்லும் போது, சாலையில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் உடைந்து கிடக்கும் சாலையின் முன் கிளரும் தூசியால் அந்த சாலையை கடந்து செல்லும் மக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களும், சாலையை கடந்து செல்லும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததால், மேற்படி சாலையை புதிதாக அமைத்துத்தர கோரி வழக்கறிஞர்ஜோ.ஜோசப் ஜினோசன் என்பவர் கடந்த 09.11.2020 அன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் வேண்டுகோள் மனு அளித்தார். மேற்படி மாநகராட்சி நிர்வாகமானது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதிதாக சாலை அமைக்க உத்தரவு பிறப்பிக்கும்படி பொதுநல வழக்கு 02.12.2020 அன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 20.01.2021 அன்று இரண்டு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கறிஞர் ஜோ.ஜோசப் ஜினோசன் மேற்படி சாலை உடைக்கப்பட்ட நிலையிலிருப்பதால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேற்படி சாலையை எட்டு வாரத்திற்குள் சாலையை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல் பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
ப. சுகுமார்Jan 27, 2021 - 11:34:57 PM | Posted IP 162.1*****
வழக்கறிஞர் ஜோ.ஜோசப் ஜினோசன் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
செல்வராஜ்Jan 27, 2021 - 10:48:56 PM | Posted IP 162.1*****
இந்த ரோட்டை திட்டமிட்டே நாசபடுத்தியதில் மத அரசியலும் உள்ளது என்றே மக்கள் நினைக்கதோன்றுகிறது. நன்றாக இருந்த சாலையை JCB எந்திரம்கொண்டு நாசப்படுத்தி பின் பல மாதங்கள் கழித்து dry கான்கிரிட்டை கொட்டி சாலையில் யாரும் போக முடியாத அளவு கெடுத்து பின் மழையில் எல்லாம் நாசமானதுதான் மிச்சம். இப்போது நான்காவது முறயையாக dry கான்கிரிட் கொட்டப்பட்டுள்ளது. மக்கள் பணத்தை விரையம் செய்து கொண்டே இருக்கிறார்கள்
S.THANGAMARIAPPANJan 27, 2021 - 09:50:21 PM | Posted IP 162.1*****
வழக்கறிஞர் திரு.ஜோசப் ஜினோசன் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
ராபின் விக்டோரியாJan 27, 2021 - 06:57:20 PM | Posted IP 108.1*****
வாழ்த்துக்கள் ஜோசப் டினோசன்.
RamalakshmiJan 27, 2021 - 06:43:36 PM | Posted IP 162.1*****
Pannalam
TN69Jan 27, 2021 - 06:25:59 PM | Posted IP 162.1*****
Overall traffic jamkum serthu case podunga. Particular area matum spotlight pannama. Please sir
TN69Jan 27, 2021 - 06:25:11 PM | Posted IP 108.1*****
Overall traffic jamkum serthu case podunga. Particular area matum spotlight pannama. Please sir
rajkumarJan 27, 2021 - 06:16:22 PM | Posted IP 108.1*****
NANDRI
MathanJan 27, 2021 - 03:30:04 PM | Posted IP 108.1*****
Super
KumarJan 27, 2021 - 01:15:10 PM | Posted IP 173.2*****
அருமையான செயல் அய்யா
மேலும் தொடரும் செய்திகள்

ஒரு ஆசிரியர் பணியிடத்துக்கு இரு ஆசிரியை போட்டி: பணியில் சேர வந்தவருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
புதன் 3, மார்ச் 2021 8:49:56 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதியானவர்கள்!!
புதன் 3, மார்ச் 2021 8:30:55 AM (IST)

கணவரின் மது பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை
புதன் 3, மார்ச் 2021 8:26:54 AM (IST)

பெட்ரோல், டீசல் விலை உயா்வு தோ்தலில் பிரதிபலிக்கும் : தூத்துக்குடியில் சரத்குமாா் பேட்டி
புதன் 3, மார்ச் 2021 8:08:04 AM (IST)

தூத்துக்குடியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனை: ஆட்சியா் ஆய்வு
புதன் 3, மார்ச் 2021 8:01:19 AM (IST)

சாத்தான்குளம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 2, மார்ச் 2021 9:48:53 PM (IST)

தூத்துக்குடி ஏரியா காரன்Jan 29, 2021 - 08:54:59 PM | Posted IP 173.2*****