» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் திடீர் மாயம்

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 4:18:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி  ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூரில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மகள் கனகா (21). அப்பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் கனகாவுக்கு காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுதது ஆறுமுக நயினார், வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்தோடு சொந்த ஊரான ரங்கநாதபுரத்திற்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 31ம் தேதி வீட்டை விட்டு சென்ற கனகா, அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து குலசேகரப்பட்டணம் காவல் நிலையத்தில் ஆறுமுக நயினார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கனகாவை காதலித்து வந்த திருப்பூர் வாலிபர் அவரை அழைத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாயமான காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர். 

மற்றொரு பெண் மாயம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி எஸ்எஸ் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகராஜன். இவரது  மகள் மகேஸ்வரி பாலா (19), கடந்த 30ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஆழ்வார் திருநகரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஊரக பகுதிகளில் நாளை மின்தடை

ஞாயிறு 27, செப்டம்பர் 2020 6:17:43 PM (IST)

Sponsored Ads





Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory