» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணல் திருட்டை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் : மாவட்டஆட்சியருக்கு மனு

வெள்ளி 29, மே 2020 1:44:03 PM (IST)

சட்டவிரோதமான மணல் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தூத்துக்குடி மாவட்ட குழு மாவட்ட செயலாளர் சந்தனசேகர் தூத்துக்குடி ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகா மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அரசுத்துறையின் மணல் அள்ளுவது தொடர்பான எவ்வித அனுமதியுமின்றி  இயந்திரங்கள் மூலம் கனரக லாரிகளில்  திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே எட்டையபுரம் தாலுகா ஐயன்ராஜாபட்டி கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த நபர்கள் அங்குள்ள மக்களின் எதிர்ப்புகளுக்கு பிறகு தற்போது மேற்படி கீழ்நாட்டுக்குறிச்சி கிராமத்தில் சட்டவிரோதமான மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் திருட்டை தடுக்க வேண்டிய காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் இது போன்ற மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது  கண்டனத்திற்குரியது .எனவே தாங்கள் (ஆட்சியர்) உடனடி நடவடிக்கை எடுத்து மனல் திருட்டை தடுத்திட வேண்டுகிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory