» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

புதன் 27, மே 2020 8:38:51 AM (IST)

கோவில்பட்டி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி முத்துராமலிங்கத் தேவர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகள் செல்வராணி (23). இவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் தெரிந்தவுடன் நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக  கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Black Forest Cakes




Anbu Communications




Thoothukudi Business Directory