» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு: சான்று பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

வெள்ளி 24, மே 2019 11:01:29 AM (IST)

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு தொடர்பாக சான்று பெற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவுறுத்தியுள்ளபடி, தற்போது நடைமுறையில் இருக்கும் திட்ட இடஒதுக்கீடுகளில் வராத தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரது குடும்ப ஆண்டு வருமானம் 8.00 இலட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினராகக் கருதப்பட்டு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப ஆண்டு வருமானம் கணக்கிடுகையில் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் விவசாய நிலம் இருத்தல், 1000 சதுர அடி மற்றும் அதற்கும் மேல் வைத்திருக்கும் குடியிருப்பு மனை, நகராட்சி பகுதிகளில் 100 சதுர யார்டு மற்றும் அதற்கு மேல் வைத்திருக்கும் குடியிருப்பு மனை, நகராட்சியாக அறிவிக்கப்படாத பிற இடங்களில் 200 சதுர யார்டு மற்றும் அதற்கு மேல் வைத்திருக்கும் குடியிருப்பு மனை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மனுதாரர் சான்று கோரும் நிதியாண்டிற்கு முந்தைய நிதியாண்டின் குடும்ப ஆண்டு வருமானத்தைக் கணக்கில் கொண்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியரால் சான்று வழங்கப்படும்.

சான்று கோரும் நபரது தாய், தந்தை, 18 வயதிற்கு கீழ் உள்ள சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மனைவி, 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். சான்று கோரும் விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தினை அணுகி விண்ணப்பம் அளித்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று (Economically Weaker Section Certificate) பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

தூத்துக்குடி மக்கள்Jun 3, 2019 - 10:03:23 AM | Posted IP 162.1*****

அம்மா திட்ட முகாம் போல பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினராகக் கருதப்பட்டு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு சான்று பெற ஒரு முகாம் அமைத்தல் மக்கள் பயன் பெற எதுவாக இருக்கும் அரசு கருணை காட்டுமா ?

தூத்துக்குடி மக்கள்Jun 3, 2019 - 09:59:49 AM | Posted IP 162.1*****

கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர் அவர்கள் அலுவலகத்து சரியாக வருவது இல்லை ? அப்படி வந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டிங் மீட்டிங் என்று சென்று விடுகிறார்கள் ? வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இது போல சான்று அளிக்கும் நாள் என்று ஒரு நாளை குறிப்பிட்டு வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரி வட்ட ஆட்சியர் இருந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு இடவேண்டும்

தூத்துக்குடி மக்கள்Jun 3, 2019 - 09:53:45 AM | Posted IP 108.1*****

கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் கள் உறுதிமொழி அளித்த பின்பு தான் வட்ட ஆட்சியர் சான்று தருவார் போல ? மக்கள் தினமும் வட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றால் தான் கிடைக்கும் போல தெரிகிறது ? இதை எல்லாம் இ சேவை மூலம் வழங்க அரசு உத்தரவு இடவேண்டும் ? காலம் விரயம் ஆகாது ? விரைவில் சான்று பெற முடியும் ?

தம்பரஸ் பாலாஜிமே 24, 2019 - 12:22:57 PM | Posted IP 108.1*****

மத்திய மாநில அரசுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வீர வாஞ்சிநாதன் தேச பக்த பேரவை தூத்துக்குடி

தம்பரஸ் பாலாஜிமே 24, 2019 - 11:46:14 AM | Posted IP 108.1*****

தமிழ்நாடு அரசுக்கு நன்றி ப்ராஹ்மணர் சங்கம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory