» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:39:39 AM (IST)

போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்காவிடம் ஈரான் இழப்பீடு கோரி வரும் நிலையில், "கடந்த காலங்களில் நடத்திய தாக்குதல்களுக்காக ஈரான்தான் அமெரிக்காவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் - அமெரிக்கா இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமான போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்களும் பேச்சுவார்த்தை முயற்சிகளும் தொடர்ந்து வருகின்றன.
சமீபத்தில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கமாண்டர் முகம்மது பாஹர் ஜோல்காதர் பேசுகையில்: ஈரானின் கூட்டாளிகள் மீதான போரை அமெரிக்கா நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். போரால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு அளிப்பதுடன், பொருளாதாரத் தடைகளையும் சொத்து முடக்கத்தையும் நீக்க வேண்டும்.இந்நிபந்தனைகளுக்குச் சம்மதித்தால் மட்டுமே 'ஹோர்முஸ்' நீரிணை மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
ஈரானின் இக்கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது: ஜெனரல் சொலைமானியின் தலைமையில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களுக்காக ஈரானிடம் இழப்பீடு கேட்கப்படும்.
கடந்த 50 ஆண்டுகளில் ஈரானால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஈரானுடன் நடைபெறும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தக் கோரிக்கைகளை உறுதியாக முன்வைக்க அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேசத்தில் இந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை: 2 பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:17:30 PM (IST)

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்: 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:41:34 PM (IST)

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி: டிரம்ப் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்!!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:46:27 AM (IST)

ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 8:47:12 AM (IST)

உச்ச நீதிமன்றம் அனுமதி: 9 மாதங்களுக்கு பின் இம்ரான் கானை சிறையில் சந்தித்த குடும்பத்தினர்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:12:37 PM (IST)

27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெண் திடீர் கைது: கிரீன் கார்டு இருந்தும் அரசு கெடுபிடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:51:31 PM (IST)









கந்தசாமிAug 11, 2026 - 01:44:58 PM | Posted IP 162.1*****