» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் : ரஷிய முன்னாள் அதிபர்
திங்கள் 23, ஜூன் 2025 5:51:04 PM (IST)

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் என்று ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதற்காக அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரித்து உள்ளார்.
இந்நிலையில், ரஷியாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் செயலால், இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆட்பட்டு உள்ளது. அந்நாட்டின் பல நகரங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனினும், அமெரிக்க தாக்குதலில் ஈரானின் அரசு தப்பி விட்டது. எல்லா வகையிலும் அது முன்பை விட வலுவடைந்து உள்ளது என்றே கூறலாம்.
அந்நாட்டின் மத தலைவரிடம் இருந்து, இதற்கு முன்பு வேறுபட்டோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தோ இருந்தவர்கள் கூட தற்போது, ஆன்மீக தலைமையை தேடி ஓடும் நிலை காணப்படுகிறது. அமெரிக்காவை டிரம்ப், மற்றொரு போரில் தள்ளியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை உலகம் முழுவதும் உள்ள பெருமளவிலான நாடுகள் எதிர்க்கின்றன. அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான் என்று கூறி உங்களுக்கு வாழ்த்துகள் என்றும் கிண்டலாக அவர் தெரிவித்து உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)










