» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குவைத் கட்டடத்தில் தீவிபத்து! 10 இந்தியர்கள் உள்பட 43 பேர் பலி! தமிழர்கள் நிலை என்ன?

புதன் 12, ஜூன் 2024 4:19:42 PM (IST)குவைத்தில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 இந்தியார்கள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில்இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் பற்றிய தீ சடசடவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இந்தக் கட்டடத்தில் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் தமிழர்களும் உண்டா, தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.

கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் கேஜி ஆபிரஹாமுக்குச் சொந்தமான கட்டடமென ஆன்மனோராமா தெரிவித்துள்ளது. அவரின் என்பிடிசி நிறுவன சூப்பர் மார்கெட் ஊழியர்களும் இந்தக் கட்டடத்தில் தங்கியுள்ளனர். மேலும் 40 பேர் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவ்ம் தடயவியல் நிபுணர்கள் தீயில் எரிந்த பகுதிகளில் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட குவைத் துணை பிரதமர் பஹத் யூசுப் அல்-சபா இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கட்டட உடைமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory