» செய்திகள் - விளையாட்டு » உலகம்

விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் பலி: லாரி டிரைவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு!

சனி 25, மே 2024 9:53:49 AM (IST)



கனடாவில் விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

கனடா நாட்டின் சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். இந்நிலையில், ஜஸ்கிரத் தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது, ஜஸ்கிரத் குற்றவாளி என உறுதியானது. இதையடுத்து அவரது குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம்  உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory